ஆன்லைன் அலாரம்

அலாரம் நேரம்

:

அலாரம் ஒலி?

மறுபடியும் அடித்தல் காலம்? (நிமிடங்கள்)

மீதமுள்ள நேரம்

அலாரம் என்பது என்ன?

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒலியெழுப்புமாறு வடிவமைக்கப்பட்ட கடிகாரங்களுக்கு அலாரம் என்ற பொதுப்பெயர் உள்ளது. இவற்றில் பெரும்பாலானவை மக்களை துயிலெழுப்பவும், சில நேரங்களில் நினைவூட்டியாகவும் பயன்படுகின்றன. இவை பெரும்பாலும் ஒலியெழுப்புமாறு இருந்தாலும், எளிதில் துயிலெழ இயலாதவர்களுக்காக உரத்த சத்தம், ஒளி, அல்லது அதிர்வு எழுப்பும் கடிகாரங்களும் உள்ளன.

முதன்முதலில் அலாரத்தை பயன்படுத்தியது யார்?

நவுக்ரேட்டிஸை சேர்ந்த அத்தினேயஸ் என்ற அறிஞர் குறிப்பிட்டுள்ளபடி, பழம்பெரும் அறிஞரான பிளாட்டோ "கிலெப்சைட்ரா" என்ற நீர்க் கடிகாரத்தை தமது வகுப்புகள் தொடங்குவதன் குறியீடாக பயன்படுத்தியுள்ளார்.

அலாரத்தை எப்போது, யார் கண்டுபிடித்தார்?

தற்கால அலாரத்தை லீவி ஹட்சின்ஸ் என்பவர் 1787ல் கண்டுபிடித்தார்.

அலாரத்துக்கு எப்போது, யார் காப்புரிமை பெற்றார்?

மாற்றியமைக்கக்கூடிய அலாரத்துக்கு 1847ல் பிரெஞ்சு கடிகார தயாரிப்பாளரான ஆண்டன் ரெடீர் என்பவர் காப்புரிமை பெற்றார்.

அலாரம் கண்டுபிடிப்பதற்கு முன் மக்கள் எப்படி துயிலெழுந்தனர்?

கடிகாரமோ அலாரமோ கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் மக்கள் பெரும்பாலும் சீக்கிரமாக உறங்கச்சென்று, கதிரொளியால் எழும்பினர். இதைத்தவிர பரவலாக பயன்படுத்தப்பட்ட முறை மெழுகுவர்த்தி. தம்மை துயிலெழுப்ப ஒருவரை நியமிக்கும் அளவுக்கு வசதியற்றவர்கள் மெழுகுவர்த்திக்குள் ஆணியை செருகி, மெழுகு உருகி ஆணி விழும் ஒலியால் எழும்பினர்.

அலாரம் எப்படி வேலை செய்கிறது?

இயந்திர அலாரம் பெரும்பாலும் உள்ளிருக்கும் கியர் மற்றும் பேட்டரியின் உதவியால் இயங்குகின்றன. மொபைல் மற்றும் கம்ப்யூட்டரில் உள்ள அலாரங்கள் மென்பொருளால் இயங்குகின்றன.

உங்கள் லேப்டாப்பை அலாரமாக பயன்படுத்தலாமா?

கணினியில் அலாரம் வைக்க முடியும் என்றாலும், பெரும்பாலான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் கைப்பேசிகள் போல அலாரம், ஸ்டாப்வாட்ச் போன்ற செயலிகள் இயல்பாக இருப்பதில்லை.

கணினியில் அலாரம் வைப்பது எப்படி?

விண்டோஸ் 10 பயன்படுத்துபவர்கள் செயலி பட்டியலில் உள்ள “Alarms & Clock (கடிகாரம்)”-ஐ பயன்படுத்தி அலாரம் வைக்கலாம். மேக் பயன்படுத்துபவர்கள் -ல் உள்ள செயலிகளை தேர்ந்தெடுக்கலாம். செயலிகளை இன்ஸ்டால் செய்ய விரும்பாதவர்கள் ஆன்லைனில் எளிதாக அலாரம் வைக்கலாம்.

ஆன்லைன் அலாரம் என்றால் என்ன?

துயிலெழவோ, எதற்காவது நினைவூட்டப்படவோ டைமர் தேவைப்படுபவர்கள் பயன்பெற ஆன்லைனில் இயங்கும் செயலி தான் ஆன்லைன் அலாரம்

ஆன்லைன் அலாரம் வைப்பது எப்படி?

ஆன்லைன் அலாரம் மூலமாக அலாரம் வைக்க விரும்பினால், “அலாரம் நேரம்” என்ற இடத்தில அலாரம் ஒலிக்கும் நேரத்தை தேர்வு செய்து, பின்னர் அலாரம் ஒலியை தேர்ந்தெடுத்து “அலாரம் அமைக்கவும்” பட்டனை அழுத்தவும்.

கணினி ஸ்லீப் மோடில் இருக்கும்போது ஆன்லைன் அலாரம் வேலை செய்யுமா?

இல்லை, கணினி ஸ்லீப் மோடில் இருக்கும்போது ஆன்லைன் அலாரம் வேலை செய்யாது.

நான் இந்த டேப்பை மூடினாள் ஆன்லைன் அலாரம் வேலை செய்யுமா?

இல்லை, இந்த டேப்பை மூடினாள் ஆன்லன் அலாரம் வேலை செய்யாது.

கணினியை ஷட் டவுன் செய்தபின் ஆன்லைன் அலாரம் வேலை செய்யுமா?

இல்லை, கணினியை ஷட் டவுன் செய்தல் ஆன்லைன் அலாரம் மட்டுமல்ல, வேறு எந்த அலாரம் செயலியும் வேலை செய்யாது.